*அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
விருதுநகர் : ஊராட்சிகளின் தூய்மை பணிக்கு ரூ.3.66 கோடி மதிப்பிலான 145 மின்கலன் வாகனங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தில் மின்கலன் வாகனங்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் எம்பி மாணிக்கம்தாகூர், எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 35 ஊராட்சிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ரூ.3.66 கோடி மதிப்பிலான 145 மின்கலன் வாகனங்களை தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்வில் அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ஊராட்சிகளின் தூய்மை பணிக்கு ரூ.3.66 கோடி மதிப்பில் மின்கலன் வாகனங்கள் appeared first on Dinakaran.