சென்னை: தனது செல்போன் உரையாடல்கள் திமுக அரசால் ஒட்டுக் கேட்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில் என்னுடைய தொலைப்பேசி அழைப்புகளும் தான் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாமகவில் ராமதாஸ் – அன்புமணி, மதிமுகவில் வைகோ – துரை வைகோ என அக்கட்சிகளில் நடைபெற்று வரும் பிரச்சினைகளால் நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை இல்லை. எந்தக் கட்சியில் தான் பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. அது அவர்களது கட்சி பிரச்சினை. அவர்களே பேசி சரி செய்து கொள்வார்கள். இதைப்பற்றி நாம் பேசுவது பண்பாடற்ற செயலாகும்.