ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் வணிக நலன்களின் உத்திகள் சூப்பர் ஸ்டார் வீரர்களின் வர்த்தக நலன்கள் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள், அணி உரிமையளர்களின் கணக்கீடுகளுக்குட்பட்டே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், அப்படியும் சில போட்டிகள் உண்மையான சவாலாக அமைந்து விடுவதுண்டு, நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் – கேகேஆர் போட்டி அத்தகைய தன்மை கொண்டது.
அதனால்தான் வெற்றி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், தான் ஐபிஎல் பயிற்சியாளராக இருக்கும் காலத்தில் இந்த வெற்றிதான் மிகச் சிறந்த வெற்றி என்று பாராட்டுகிறார். பொதுவாக, ஐபிஎல் பயிற்சியாளர்கள் பிக்பாஸ் போன்று எதைச் சொல்ல வேண்டும், மீடியாவிடம் எதைப் பேசவேண்டும் போன்ற சமாச்சாரங்களில் அணியின் நிர்வாகிகளின் வழிகாட்டுதலுக்குட்பட்டே செயல்படுவார்கள். அதனால் எந்தப் போட்டியைப் பற்றியும் விமர்சன ரீதியான கருத்துகளுக்கு வாய்ப்பே இல்லை.