சென்னை: மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய வார்த்தைகள் இடம்பெறாத இந்திய அரசியமைப்பு சட்ட புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள மக்களவை தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி. வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை அனுப்பி இருப்பதாகவும், அதன் முகப்புரையில் சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய ஆங்கிலச் சொற்கள் (Socialist, Secular) இடம்பெறவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.