பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் பெண் ஒருவர் தான் கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரல் டாபிக். எங்கு திரும்பினாலும் இவருடைய புகைப்படங்களே வலம் வருகின்றன.
மத்தியப்பிரதேச மாநில இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். பிரபல மாடல்களே தோற்றுப் போகும் வகையில் இவரது எழில்கொஞ்சும் அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்யவே சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக மாறினார் அந்த பெண். அவரது தோற்றத்தை வைத்து அவருக்கு ‘மோனாலிசா போஸ்லே’ என்று நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.