
சென்னை: இணையதளம் மூலம் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2002,2005 -ன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இதுதவிர, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதள மான https://voters.eci.gov.in- ல் கணக்கீட்டு படிவத்தை (Enum eration Form) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் “Fill Enumeration Form” என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.

