சென்னை: “பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என்று சட்டப்பேரவையில், விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பல்வேறு சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.