புதுடெல்லி: சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் மோஹோல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2024-25-ம் நிதியாண்டில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன் ரூ.9,568.4 கோடி இழப்பை கண்டுள்ளன.
ஆகாசா ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவை வரிக்கு முன், முறையே ரூ.1,983.4 கோடி மற்றும் ரூ.58.1 கோடி இழப்பை சந்தித்துள்ளன. அதேசமயம், இண்டிகோ நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.7,587.5 கோடியை ஈட்டியுள்ளது.