திருமலை: ஆகஸ்ட் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, வரும் 19-ம் தேதி முதல் ஆன்லைன் டிக்கெட்டுகள் மற்றும் இலவச டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் வெளியிட உள்ளது. அதன்படி 19-ம் தேதி காலை 10 மணி முதல் 21-ம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறை ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
22-ம் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வருடாந்திர பவித்ரோற்சவத்திற்கு முன்பதிவு செய்யலாம். 23-ம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியாக உள்ளது. 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் தொடங்குகிறது.