புதுடெல்லி: அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது.
இது தொடர்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களுக்கான பெருந்தரவு மற்றும் தரவு அறிவியல் குறித்த மதிப்புமிக்க ஐ.நா நிபுணர்கள் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. பெருந்தரவு மற்றும் தரவு அறிவியலுக்கான அதிகாரப்பூர்வ புள்ளியியல் பற்றிய ஐநா நிபுணர்களின் குழு, பெருந்தரவின் நன்மைகள் மற்றும் சவால்களை மேலும் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணித்து அறிக்கையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும்.