இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரில் மும்பையில் உள்ள மும்பை கால்பந்து அரினாவில் இன்று மாலை 5:00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி, சென்னையின் எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னையின் எஃப்சிக்கு எதிராக மும்பை சிட்டி எஃப்சி கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் (வெற்றி 7, டிரா 2) உள்ளது.
நடப்பு சீசனில் அந்த அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 5 டிரா, 2 தோல்விகளுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் சென்னையின் எஃப்சி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் அந்த அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 3 தோல்வியை பெற்றுள்ளது.