சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனை படித்துப்பார்த்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர். கூடுதல் அட்வகேட் ஜெனரல், உயர் நீதிமன்றத்திற்கு வருபவர்களை சோதனையிடுவது போன்ற நடவடிக்கைகஎடுக்கப்பட்டுள்ளது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து காவல்துறை, சிஐஎஸ்எப், அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் பரிந்துரை தர வேண்டும் எனக்கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.
The post ஐகோர்ட் வளாகத்திற்கு வெடிகுண்டு வந்த விவகாரம் பாதுகாப்பை பலப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? சிஐஎஸ்எப் பரிந்துரை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.