புதுடெல்லி: குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், தேசிய அணிக்காக விளையாட வேண்டியது இருப்பதால் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறார். இதனால் பிளே ஆஃப் சுற்றில் அவருக்கு பதிலாக இலங்கை வீரர் குஷால் மெண்டிஸை குஜராத் அணி ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் நாளை (17-ம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி லீக் ஆட்டங்கள் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பின்னர் 29, 30 ஜூன் 1-ம் தேதிகளில் பிளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.