மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2025-ல் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையைத் தயார் செய்யும் பணிகள் நடை பெற்று வந்தன. இந்நிலையில் நேற்று மும்பையில் ராஜீவ் சுக்லா கூறியதாவது: