ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் சந்தையில் இன்று ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இங்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தற்போது வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின் சீசன் களைகட்டி வருகிறது. அதற்கேற்ப வெள்ளிக்கிழமையான இன்று காலை 6 மணிக்கு ஆட்டுச்சந்தை வழக்கம்போல் கூடியது.
திருவிழா சீசனையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக கருப்புநிற கிடாக்களின் விற்பனை அதிகரித்தது. இதனால் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று ரூ.20 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஒடுகத்தூர் சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.