சென்னை: சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல்துறையினர் சம்மனை ஒட்டிச் சென்றனர்.
அப்போது, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமல்ராஜ் மற்றும் சுபாகர் இருவரும் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யத மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில், அரசியல் நோக்கில் தாங்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறனானது. துப்பாக்கிக்கு உரிய அனுமதி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
The post ஒட்டிய சம்மனை கிழித்து போலீசார் மீது தாக்கிய விவகாரம் சீமான் வீட்டு பணியாளர், பாதுகாவலர் ஜாமீன் மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை விசாரணை appeared first on Dinakaran.