சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் இன்று (மார்ச் 14-ஆம் தேதி) கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,230-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.