
புதுடெல்லி: டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய பிறகு, வரும் 19-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் கூறும்போது, “விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் விளையாடுவது சவாலாக இருக்கும். சிறந்த பந்து வீச்சாளர்களை எதிர்
கொள்ள அவர்களின் திறமைகளை மீண்டும் கூர்மைப்படுத்த சில மாற்றங்கள் தேவைப்படும்.

