வாஷிங்டன்: சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா – உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வெள்ளைமாளிகையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறுகையில், “எங்களுடைய பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் அந்நாட்டுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்கும் காரியங்களை என்னால் செய்ய முடியும். அம்முடிவினை நான் விரும்பவில்லை. ஆனால் நான் அமைதியைக் காண விரும்புகிறேன்.” என்று தெரிவித்தார்.