‘ஒரே நாடு, ஒரே சந்தா’ (one nation one subscription) என்கிற திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் ஆராய்ச்சி இதழ்கள், ஆய்வு வெளியீடுகளை மாணவர்கள் எளிமையாக அணுகும் சூழல் உருவாகியுள்ளது. உயர் கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்களின் ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் எனக் கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் அதிக ஆராய்ச்சி இதழ்களை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்தது. இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே சந்தா’ திட்டம் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி இதழ்கள் வெளியிடுவதை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.