கடலூர்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டது. லாரி கடலூர் முதுநகர் அருகே சுத்துக்குளம் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த கடை மீது மோதியது. இதில் லாரி தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இதில் டிரைவர் கங்காதரன், கடை ஊழியர் சூர்யா உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து கடலூர் தீயணைப்பு துறையினர் வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 2 மினி டெம்போ, 3 பைக், 6 கடைகள் எரிந்து சேதமாகின. மின்சார ஒயர்களும் தீப்பிடித்து எரிந்ததால் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
The post கச்சா எண்ணெய் டேங்கர் லாரியில் தீ 3 பேர் படுகாயம்: 6 கடைகளும் நாசம் appeared first on Dinakaran.