இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவுக்கு முந்தைய விறுவிறுப்பான நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கரோனாவுக்கு முந்தைய 2019 காலகட்டத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆணடில் அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து விசா ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விஎப்எஸ் குளோபலின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான (தெற்கு ஆசியா) யம்மி தல்வார் கூறுகையி்ல், “ கனடா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்வி்ட்சர்லாந்து, சவுதி அரேபியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை இந்தியர்களின் சுற்றுலாவுக்கான முக்கிய விருப்பத் தேர்வு நாடுகளாக உள்ளன.