கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்தனர்.
கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, வேப்பூர், பண்ருட்டி, விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, காட்டு மன்னார் கோவில், தொழுதூர், ஸ்ரீமுஷ்ணம், அண்ணாமலை நகர், வடலூர், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு பகுதியில் 600 ஏக்கர் சம்பா பருவ நெல் வயல்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.