கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம் வழியாக செல்லும் மூன்று ரயில்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் விக்கிரவாண்டி ரயில் நிலையத்திற்கும் இடையே பாலம் எண் 452-ல் கனமழையின் காரணத்தால் அதிக அளவு மழை தண்ணீர் தண்டவாளம் உள்ள பாலத்தின் கீழே செல்வதால் இன்று (டிச.2) கடலூர் சிதம்பரம் வழியாக செல்லும் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் அதிவேக ரயில், சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் அதிவேக ரயிலும், கோயம்புத்தூர் இருந்து தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.