‘சப்தம்’ திட்டமிடப்படி வெளியாகாததற்கு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்.
பிப்.28-ம் தேதி திட்டமிட்டப்படி ‘சப்தம்’ வெளியாகவில்லை. அப்படத்தின் மீதிருந்த பொருளாதார நெருக்கடி அனைத்தும் சரி செய்யப்பட்டு மார்ச் 1-ம் தேதி மதியக் காட்சியில் இருந்துதான் வெளியானது. ‘சப்தம்’ வெளியானவுடன் மக்களோடு ஆதி மற்றும் இயக்குநர் அறிவழகன் படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார்கள்.