சென்னை: “திருந்தவில்லையென்றால், திருத்தப்படுவீர்கள். கட்டாய ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்க வேண்டாம்” என்றும் திமுகவுக்கு பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மாணவர்கள், இளைஞர்களிடையே போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை என மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் திமுக அரசின் மீதான மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப ‘கெட் அவுட் மோடி’ என ஹேஸ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.