சென்னை: ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் பிரதான சாலைகள், தெருக்களில் ஆறுபோல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மாநிலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கனமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை(டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்;
* திருவண்ணாமலை
* கடலூர்
* விழுப்புரம்
* திருப்பத்தூர்
* கள்ளக்குறிச்சி
* கிருஷ்ணகிரி
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்;
* தருமபுரி
* வேலூர்
* ராணிப்பேட்டை
* சேலம்
புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை(டிச.02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
The post கனமழை காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை(டிச.02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.