பாங்காக் : கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையேயான மோதலின எதிரொலியாக அந்நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியா தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக கம்போடியா – தாய்லாந்து நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. மூன்றாவது நாளாக நீடிக்கும் போரில் இருநாடுகளும் பீரங்கி குண்டுகள் மற்றும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இரண்டு தரப்பிலும் 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் 100க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த மோதல் எதிரொலியாக கம்போடியா – தாய்லாந்து நாடுகளின் எல்லை வழியாக இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கம்போடியாவில் இருக்கும் இந்தியர்கள் அவசர தேவைக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்காக 085592881676 என்ற அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது இந்திய தூதரகம். அவசர உதவிக்கு phnompenh@mea.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
The post கம்போடியா – தாய்லாந்து இடையே மோதல்: இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்; அவசர உதவி எண்களும் அறிவிப்பு!! appeared first on Dinakaran.