கம்போடியாவில் ஓட்டல் வேலைக்குச் சென்ற கோவை இளைஞரை சைபர் குற்றவாளிகள் கடத்தி சித்திரவதை செய்ததில், அவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இளைஞரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு கோவை மாவட்ட ஆட்சியரிடம் அவரின் தாயார் உதவி கோரியுள்ளார்.

