* 3ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
கரூர் : கிருஷ்ணராயபுரத்தில் 3ம் கட்டமாக நடமக்களுடன் முதல்வர் திட்ட துவக்க விழாவில் 33 பயனாளிகளுக்கு ரூ.57.19 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.3ம் கட்டமாக மக்களுடன் முதல்வர் திட்ட துவக்கவிழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மரு.மா.மதிவேந்தன்முதல்வரின் மக்களுடன் முதல்வர் திட்டம் 3 ம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிக அளவில் வசிக்கும் 24 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள் அடங்கிய 184 வட்டங்களில் முதல் நடத்த ஆணையிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இம்முகாம்களில் 15 அரசுத் துறைகள் வழங்கும் 44 சேவைகளை மக்களுக்கு வழங்கப்படுகிறது. இம்முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்களை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை உரிய காலத்தில் வழங்கப்படும்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சேவை வழங்கலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் நோக்கத்தில், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளுக்கு முதற்கட்டமாக கடந்த 18.12.2023 முதல் 06.01.2024 வரை நடைபெற்ற 50 முகாம்கள் மூலம் 20,746 மனுக்களும், இரண்டாம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் கடந்த 11.07.2024 முதல் 08.08.2024 வரை நடைபெற்ற 46 முகாம்கள் மூலம் 32,102 மனுக்களும் என மொத்தம் 96 முகாம்கள் மூலம் 52,848 மனுக்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. 3-ம் கட்டமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் தொடங்கி வருகின்றன 04.02.2025 வரை நடைபெற உள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். தகுதியுடையவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை விரைவாக வழங்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் தெரிவித்தனர்.
இன்றைய தினம் இம்முகாம் ஆனது தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாடி, வெள்ளியணை, ஜெகதாபி, ஆண்டாங்கோவில் கிழக்கு மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெரூர் வடக்கு ஊராட்சிகளில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தாட்கோ மூலம் ஒரு பயனாளிக்கு கணினி மையம் அமைக்க ரூ.8.01 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவித் தொகையும், புதிதாக துணிக்கடை வைக்க ரூ.5.54 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவித் தொகையும், ரூ.9.54 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு சரக்கு வாகனமும் ரூ.9.33 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு சுற்றுலா வாகனமும் மற்றும் ரூ.8.25 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு சுற்றுலா வாகனமும், நெரூர் வடபாகம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சமுதாய மூலதன நிதி திட்டத்தின் கீழ் 4 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தலா ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும்,
ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி பெரியார் நகரில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் 3 பேருக்கு மின்விகிதபடி மாற்றத்திற்கான ஆணையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக ஒரு விவசாயிக்கு நலத் திட்ட உதவியும், மணவாடி ஊராட்சி பெருமாள்பட்டி காலனியில் 4 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும் மற்றும் வருவாய் துறையின் சார்பாக ஒருவருக்கு சாதி சான்றிதழும் தாந்தோணி ஒன்றியம்,
ஜெகதாபி ஊராட்சியில் மகளிர் திட்டம் சார்பாக மீன்கடை வைப்பதற்காக ஒரு பயனாளிக்கு ரூ.50,000 கடனும், புதிதாக தையல் நிலையம் வைப்பதற்கு ஒரு பயனாளிக்கு ரூ.35,000 மதிப்பீட்டில் கடனுதவியும், கறிக்கடை வைப்பதற்கு ஒரு பயனாளிக்கு ரூ.50,000/- மதிப்பீட்டில் கடனுதவியும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் சார்பாக ஒரு விவசாயிக்கு ரூ.20,000/- மதிப்பீட்டில் முருங்கை பதியனும், ரூ.10,000/- மதிப்பீட்டில் ஒரு விவசாயிக்கு வெங்காய விதைகளும் வெள்ளியணை ஊராட்சி, ஜல்லிப்பட்டியில் மகளிர் திட்டம் சார்பாக ஒரு மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவியும்,
கூட்டுறவுத் துறையின் சார்பாக 4 பயனாளிளுக்கு ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன்களும், வருவாய்துறையின் சார்பாக 6 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்களும் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு புதிய மின்னனு குடும்ப அட்டை என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ. 57,19,342 மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமதுபைசல்.
The post கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் 33 பயனாளிகளுக்கு ₹57.19 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.