பெங்களூரு: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் 50 மீட்டர் ஆழமான பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் லாரியில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை 63-ல், யெல்லாபூர் தாலுகாவில் உள்ள குல்லாபூர் கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், ஹாவேரி மாவட்டத்தின் சவனூர் என்ற பகுதியில் இருந்து கும்தா சந்தைக்கு காய்கறிகளை விற்கச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.