ஆறு முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்கும் சட்டம் (Right to Education Act), 2019-ம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வு கிடையாது. இதில் 2019-ம் ஆண்டு மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. மாநில அரசுகள் விரும்பினால் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டது.
குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் தேர்வு முறையை கொண்டு வந்தன. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மீண்டும் தேர்வு முறையை கொண்டு வந்து சமீபத்தில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.