சென்னை கலாஷேத்ரா மாணவி, உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல பரதநாட்டியக் கலைஞர், தக்‌ஷின சித்ராவில் கலை மேலாண்மையில் முதுநிலை டிப்ளமா முடித்தவர், ஹார்வர்டு சம்மர் ஸ்கூலில் ஜர்னலிசம் – பிசினஸ் லீடர்ஷிப் படித்தவர் ராதே. சத்குருவின் மகள்.
இவரைப் போலவே, சிறு வயதிலேயே கலைத் துறையில் பயிற்சி பெற்றவர் சந்தீப். 4 வயதிலேயே கர்னாடக இசையை பாடத் தொடங்கி, 11 வயதில் அரங்கேறியவர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘லா அண்ட் சொசைட்டி’ பட்டப் படிப்பை முடித்தவர். பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து கர்னாடக இசை கச்சேரிகளை நிகழ்த்தி வருகிறார்.
10-வது ஆண்டு திருமணநாள் விழாவை சமீபத்தில் கொண்டாடிய ஆதர்ச கலை தம்பதிகளான சந்தீப் நாராயண் – ராதே ஜக்கியுடன் ஒரு இனிமையான நேர்காணல்..
‘சத்குரு’வின் மகளாக எப்படி உணர்கிறீர்கள் ராதே ஜக்கி?