எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, தோழமைக் கட்சிகளும் கூட விமர்சிக்கும் துறையாக தமிழக பள்ளிக்கல்வித்துறை மாறியுள்ளது. ஆனாலும் அதற்கெல்லாம் தனக்கே உரிய பாணியில் பதில் கொடுத்து வருகிறார் துறை அமைச்சர் அன்பில் மகேஸ். நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, சீமானின் பெரியார் குறித்த விமர்சனம், விஜய்யின் அரசியல் வருகை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து…