சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, மல்லாக்கோட்டை கிராமத்தில் உள்ள தனியார் கல் குவாரியில் கடந்த 20ம் தேதி காலை 18 தொழிலாளர்கள் பாறையில் துளையிடும் பணியில் ஈடுட்டிருந்தனர். அப்போது குவாரியின் மேற்பகுதியில் இருந்து ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 பேர் பாறைகளின் அடியில் சிக்கிக் கொண்டனர். போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஒடிசாவைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் அர்ஜித் (28) உள்பட 5 பேர் பலியாகினர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தை சேர்ந்த மைக்கேல் (42) நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
The post கல் குவாரி விபத்து பலி 6 ஆக உயர்வு appeared first on Dinakaran.