கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 53 சிறார்கள் உள்பட மொத்தம் 916 பேர் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்தனர்.
இதில் காவல்துறை வாகனத்தை தீ வைத்து கொளுத்தி, போலீசார் மீது கல்வீசியதில் 124 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் சிறார்கள். மீதம் உள்ள 120 பேர் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2ல் நேற்று ஆஜராகினர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாரணயபிரசாத் மாரடைப்பால் நேற்று உயிரிழந்த நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற பணிகள் ஏதும் நடைபெறாததால் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று (8ம்தேதி) 120 பேரும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post கள்ளக்குறிச்சி பள்ளி கலவரத்தில் போலீஸ் மீது கல்வீச்சு 120 பேர் இன்று ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.