சென்னை: யுஜிசி நிர்ணயித்த ஊதியம் கோரி போராடும் கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்க்காமல் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணைப்படி, தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி ஒரு வாரமாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து அவர்களை அழைத்து பேச வேண்டிய அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.