டெல் அய்ர் பலாஹ்: காசா மீது இஸ்ரேல் நடத்திய பயங்கர வான்வழி தாக்குதலில் ஒரேஇரவில் 93 பேர் கொல்லப்பட்டனர். காசா – இஸ்ரேல் இடையே நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 4 நாள் அரசு முறை பயணமாக வளைகுடா(இஸ்ரேலை தவிர) நாடுகளுக்கு சென்ற நிலையில் பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்கா திரும்பினார்.
இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய தொடர் பயங்கர வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ளது. டெய்ர் அல் பலாஹ் மற்றும் கான் யூனிஸ் உள்பட பல்வேறு நகரங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 93 பேர் உயிரிழந்தனர். இரண்டாண்டுகளை கடந்து தொடரும் போரில் இதுவரை 53,010 பேர் உயிரிழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post காசா மீது இஸ்ரேல் விடிய விடிய வான்வழி தாக்குதல்: ஒரே இரவில் 93 பேர் பலி appeared first on Dinakaran.