டெல் அவிவ்: காசாவில் இருந்து 3 இஸ்ரேலிய பணய கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் காசா போர் நீடித்து வருகிறது. இதனிடையே ஹமாஸ் பிடியிலுள்ள பணய கைதிகளை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டு வருகிறது. மேலும் காசா முனையில் இருந்து இஸ்ரேல் பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் உடல்களை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வௌியிட்ட அறிக்கையில், “ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற ஷே லெவின்சன்(19), யோனாடன் சமரானோ(21) மற்றும் ஆப்ரா கெய்டர்(70) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு வரப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காசாவில் இருந்து 3 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் அரசு தகவல் appeared first on Dinakaran.