வாஷிங்டன்: காசா பகுதியை கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், "பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது.