கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா தீவிரமான காடு அழிப்பை எதிர்கொண்டுள்ளது. 2000 – 23க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 23 லட்சம் ஹெக்டேர் அளவில் மரங்கள் நிறைந்த நிலப்பரப்பை இந்தியா இழந்துள்ளதாக ‘குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச்’ அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்தக் காடழிப்பில் 19%, ஈரப்பதம் மிக்க முதன்மைக் காடுகளில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
முதன்மைக் காடுகள் என்பவை பூமியில் உள்ள பழமையான, அடர்த்தியான, சுற்றுச்சூழல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காடுகள். இவை பாதிப்புக்குள்ளாகும்போது உயிர்ப்பன்மை இழப்பும் காலநிலை மாற்றமும் தீவிரமடைகின்றன.