சென்னை: சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காணும் பொங்கலையொட்டி சென்னையில் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்கள். இதற்கு ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.