காதலில் ஏற்பட்ட மனக்கசப்பால் விஜய் வர்மாவை தமன்னா பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2023-ம் ஆண்டு வெளியான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரின் மூலம் விஜய் வர்மா – தமன்னா இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இதனை இருவரும் பல பேட்டிகள் உறுதிப்படுத்தினார்கள். மேலும், மும்பையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்தும் வந்தார்கள். தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒன்றாக எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டார்கள்.
சில தினங்களுக்கு முன்பு தமன்னா விரைவில் விஜய் வர்மாவை திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டார்கள். தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை உறுதி செய்யும் விதமாக விஜய் வர்மாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கிறார் தமன்னா.