திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் மற்றம் பாஜக குறித்த தனது கருத்தை திரும்பப் பெற மறுக்கும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியை கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்புகள், கேரள அரசை வலியுறுத்தியுள்ளன.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றின்கரையில் மறைந்த காந்தியவாதி பி.கோபிநாதன் நாயரின் சிலையை காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி நேற்று முன்தினம் திறந்து வைத்தார். விழாவில் உரையாற்றிய அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை கேரளாவுக்குள் நுழைந்த "ஆபத்தான மற்றும் நயவஞ்சக எதிரிகள்" என்று குறிப்பிட்டார். மேலும் அவர், ஆர்எஸ்எஸ்ஸை "விஷம்" என்றும் கூறியிருந்தார்.