காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதமாக இருந்து வந்தது. அது பட்ஜெட்டில் 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முழு ப்ரீமியம் தொகையையும் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இந்த உயர்வு பொருந்தும். அந்நியநேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு எளிமையாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் மூலம், காப்பீடுதுறையில் செய்ய முன் முதலீடுவெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவில் முன் வரும். அப்போது நாடு முழுவதும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். தற்போது நாட்டில்25 ஆயுள் காப்பீடு நிறுவனங்களும், 34 பொது காப்பீடு நிறுவனங்களும் உள்ளன. காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு, கடந்த 2015-ம் ஆண்டில் 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த 2021-ம் ஆண்டில் 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.