மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் உச்சி மாநாடு செப். 31 மற்றும் ஆக.1 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பின் கலந்து கொண்ட்னர். இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றனர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. காருக்குள் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவாதம் நடைபெற்று வந்தது.