*பகல் பொழுதிலே வாகன விளக்குகள் ‘பளிச்’
கொடைக்கானல் : கொடைக்கானலில் தொடர் சாரல் மழையால் இதமான சூழல் நிலவியது. நகரை சூழ்ந்த மேகமூட்டத்தால் பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.திண்டுக்கல் மாவட்டத்தில் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனால் கொடைக்கானலில் உள்ள தனியார் நிலங்களிலும், வனப்பகுதிகளிலும் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டது.
இதில் ஏராளமான மரங்கள் எரிந்ததால் ஆங்காங்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. ெகாடைக்கானலில் நேற்று அதிகாலை முதலே வானில் கார்மேக கூட்டம் திரண்டிருந்தது. காலை 10 மணி முதல் சாரல் மழை பெய்ய துவங்கியது. நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டதால் கடும் குளிர் நிலவியது.
இந்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் கரும்மேக கூட்டங்களால் பகலிலே இருள் சூழ்ந்து கொண்டதால் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. மேலும் தொடர் மழையால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘தற்போது பெய்து வரும் தொடர் சாரல் மழையால் வனப்பகுதியில் வறண்ட சூழல் மாறி காட்டுத்தீ பரவல் கட்டுக்குள் வந்தது’’ என்றனர்.
The post கார்மேக போர்வையில் ‘இளவரசி’ கொட்டியது மழைச்சாரல் கொடைக்கானல் ‘ஜில்ஜில்…’ appeared first on Dinakaran.