சென்னை: கார்ல் மார்க்ஸ் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: சமத்துவ உலகை கட்டமைப்பதற்கான பொதுவுடைமை கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற இலட்சிய பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்! உழைப்போர்க்கு உறுதுணையான மார்க்சிய சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமரா நூலக நுழைவு வாயிலில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நானே நேரில் சென்று தேர்வு செய்து, சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதர் மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.