சென்னை : பொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் போலியான டோக்கன்களை பயன்படுத்தி நுழைய முற்படும் காளை உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உரிமையாளர்களுக்கான விதிமுறைகள் மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு..
*காளைகளை அழைத்து வரும் அதன் உரிமையாளருடன் ஒரு நபரும் சரியாக காலை 5 மணிக்கு வரவேண்டும்.
*முல்லைநகரில் உள்ள அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகளை வரிசைப்படுத்தி முறையாக கொண்டு வர வேண்டும்.
*அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் அவிழ்த்துவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றிற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
*1 முதல் 100 வரையிலான டோக்கன் பெற்றவர்கள் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் அனுமதிக்கப்படுவர்.
*அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும், 100 , 100 காளைகள் வீதம் என மாலை 4 மணி வரையில் அனுமதிக்கப்படுவர்.
*காளைகளை கொண்டு வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன்கள் மற்றும் காளை உரிமையாளர்களின் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.
*காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது
இவ்வாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
The post காளையுடன் வரக்கூடிய 2 நபர்களும் மது அருந்தி வரக்கூடாது : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகள் வெளியீடு!! appeared first on Dinakaran.