
ஸ்ரீகாந்த், ஷாம் நடித்துள்ள த்ரில்லர் படம், ‘தி டிரெய்னர்’. ஜூனியர் எம். ஜி. ஆர், பிரின்ஸ் சால்வின், அஞ்சனா கிருத்தி, புஜிதா பொன்னாடா, வாகை சந்திரசேகர், சாய் தீனா, லதாராவ், ஜே.ஆர்.எம்.ராஜ்மோகன், பிரியங்கா ராய் என பலர் நடித்துள்ளனர். டிரான்ஸ் இந்தியா மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் நீலா தயாரிக்கிறார். பி.வேல்மாணிக்கம் இயக்கியுள்ள இப்படத்துக்கு அருள்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசை அமைத்திருக்கிறார்.
“பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு போலீஸார் உருவாக்கிய ‘காவலன்’ செயலியில் இருந்து உத்வேகம் பெற்று சமூகத்துக்குத் தேவையான படமாக இது உருவாகியுள்ளது. நடிகர் காந்த், நாய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருடன் ‘லீ’ என்ற நாயும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது.

